இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் கடும் மழை : 96 பேர் உயிரிழப்பு!

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பருவம் தவறிய கடுமையான புயல், கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக குறைந்தது 96 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல் நிலைமை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மின்விநியோகத் தடை மற்றும் அலைபேசிகளை அடைய முடியாத நிலை ஏற்பட்டமையால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தடைபட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், சேதங்களை முழுமையாக மதிப்பிடுவதிலும் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

புயல், மின்னல் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால்” 89 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் முதலில் தெரிவித்த நிலையில், பின்னர் அந்த எண்ணிக்கையை 96 ஆக உயர்த்தினர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!