இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவின் பெரும் பகுதிகளை வாட்டும் வெப்பம் – 48 செல்சியஸ் வரை பதிவு!

  • May 21, 2026
  • 0 Comments

இந்தியாவின் பெரும் பகுதிகள் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளன. வானிலை ஆய்வாளர்கள் அதிகபட்சமாக 45 பாகை  செல்சியஸ் வரையான வெப்பநிலை பதிவாகும் என எச்சரித்துள்ள நிலையில், சில பகுதிகளில் 48 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடும் வெப்பம் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் இரவு நேர பணிக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பாடசாலைகள் முன் கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்துள்ளன. இதற்கிடையே இந்தியாவின் அதிகரித்து வரும் […]

இலங்கை செய்தி வணிகம்

ஆட்டம் காணும் இலங்கை ரூபா: எகிறும் டொலர் பெறுமதி!

  • May 21, 2026
  • 0 Comments

அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 354 ரூபாவைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவின் மதிப்பு கடந்த சில நாட்களாக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என எதிரணிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 354.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 342.63 ரூபாவாகவும் உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி நேற்று […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கியின் எச்சரிக்கை : பெலாரஸுக்கு அணுவாயுதங்களை மாற்றும் ரஷ்யா!!

  • May 21, 2026
  • 0 Comments

ரஷ்யா தனது நட்பு நாடான பெலாரஸுடன் மூன்று நாள் கூட்டுப் பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யா அணு ஆயுதங்களை அங்குள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அணு ஆயுதத் திறன் கொண்ட ஏவுகணைகள் மற்றும் அவற்றின் இரகசிய நகர்வுகளை சோதிக்கும் நோக்கில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்தப் பயிற்சிகள், ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளிலும் நடைபெறும். கீவ் மீது ரஷ்யா ஒரு புதிய தரைவழித் தாக்குதலை […]

இலங்கை செய்தி

“இஸ்ரேல் பிடியில் சிக்கியுள்ள இலங்கை பெண்ணை மீட்கவும்”

  • May 21, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலத்தில் கூடுதல் கவனமெடுத்து, அவரை விடுவிப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் வௌிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டு வந்துள்ள அவர், இது குறித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளதாவது: காசாவுக்கான மனிதாபிமான உதவிகளுடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட படகுகளை இஸ்ரேல் கைப்பற்றி, சர்வதேச […]

இலங்கை செய்தி

இலங்கையில் உச்சம் தொட்ட தங்க விலை

  • May 21, 2026
  • 0 Comments

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (21) திடீர் அதிகரிப்புப் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு மீண்டும் நேசக்கரம் நீட்டும் பிரித்தானியா

  • May 21, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் உறுதியான ஆதரவு வழங்கும் பிரதமர் ஸ்டார்மர் மீண்டும் உறுதிப்படுத்தியதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் பிரதமர் ஸ்டார்மர் தொலைபேசியில் உரையாடிய போதே இதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்ய எண்ணெய் தடைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து பிரதமர் விமர்சனங்களை எதிர்கொண்ட அதே நாளில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கு பிரித்தானியா உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய […]

உலகம் செய்தி

இஸ்ரேலிய நடவடிக்கைக்கு எதிராக கனடா அழைப்பு

  • May 21, 2026
  • 0 Comments

காசா நோக்கிச் சென்ற குளோபல் சுமுட் (Global Sumud) கப்பலில் இருந்த ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, இஸ்ரேலிய தூதுவரிடம் கனடா விளக்கம் கோரியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனேடியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து உறுதிப்படுத்த இஸ்ரேலிய தூதுவரை அழைக்குமாறு வெளியுறவு அமைச்சருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கனடா பிரதமர் Mark Carney சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். மேலும், தடுத்து வைக்கப்பட்ட ஆர்வலர்கள் இஸ்ரேலியப் படைகளால் துன்புறுத்தப்படும் காணொளியை பகிர்ந்தமை குறித்தும் கார்னி விமர்சித்தார். “வன்முறையைத் […]

ஐரோப்பா

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையின் 11 ஊழியர்கள் பணிநீக்கம்!! காரணம் என்ன?

  • May 21, 2026
  • 0 Comments

கடந்த 2023 ஆம் ஆண்டு நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின்  மருத்துவப் பதிவுகளை முறையற்ற முறையில் அணுகியதற்காக, நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையின் 11 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 14 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 03 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணைகளின்போது மருத்துவப் பதிவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதன் விளைவாக […]

செய்தி தமிழ்நாடு

புற வாசல் வழியாக தமிழக அமைச்சரவையில் கங்கிரஸ் – தமிழிசை விசனம்

  • May 21, 2026
  • 0 Comments

“புற வாசல் வழியாக தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட கட்சிதான் காங்கிரஸ்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். “எந்த தீய சக்தியை எதிர்த்து போராடுவோம் எனச் சொன்னார்களோ, அந்த தீய சக்தியின் ஒரு பகுதியாக இருந்தவர்களோடு இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறார்கள் என அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், புற வாசல் வழியாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது காங்கிரஸ். பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

யாழ் விரிவுரையாளர் விரிவுரையாளர் கொலை சம்பவம் – வெளியான உண்மை

  • May 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது பொலிஸார் நீதிமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர். இதன்போதே சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். மேலும், தற்போது […]