இஸ்ரேலிய நடவடிக்கைக்கு எதிராக கனடா அழைப்பு
காசா நோக்கிச் சென்ற குளோபல் சுமுட் (Global Sumud) கப்பலில் இருந்த ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம்
தொடர்பாக, இஸ்ரேலிய தூதுவரிடம் கனடா விளக்கம் கோரியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனேடியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து உறுதிப்படுத்த இஸ்ரேலிய தூதுவரை அழைக்குமாறு வெளியுறவு அமைச்சருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கனடா பிரதமர் Mark Carney சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுத்து வைக்கப்பட்ட ஆர்வலர்கள் இஸ்ரேலியப் படைகளால் துன்புறுத்தப்படும் காணொளியை பகிர்ந்தமை குறித்தும் கார்னி விமர்சித்தார்.
“வன்முறையைத் தூண்டியதற்காக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென்-க்விர் மீது கனடா ஏற்கனவே சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை உள்ளிட்ட கடுமையான தடைகளை விதித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உதவிக் கப்பல் பயணத்தில் 11 கனேர்கள் பங்கேற்றிருந்ததாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.





