காசாவில் அல் ஜசீரா பத்திரிகையாளரை படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்ட இஸ்ரேலிய இராணுவம்
காசா பகுதியில் கத்தார் தொலைக்காட்சியான அல் ஜசீராவின் பத்திரிகையாளரை படுகொலை செய்ததாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது. இராணுவம் மற்றும் ஷின் பெட் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனத்தின் கூட்டு நடவடிக்கையில் திங்களன்று ஹோசம் ஷபாத் கொல்லப்பட்டதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அத்ரே கூறினார். கத்தாரை தளமாகக் கொண்ட அல் ஜசீரா முபாஷர் சேனலின் நிருபர் ஷபாத், ஹமாஸின் பெய்ட் ஹனூன் பட்டாலியனில் துப்பாக்கி சுடும் வீரராக இருந்ததாகவும், காசா போரின் போது இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிரான […]













