அரசியல் இலங்கை செய்தி

ஜனநாயக விரோதச் செயல்: அரசுமீது ஜீவன் கடும் காட்டம்!

  • May 28, 2026
  • 0 Comments

மக்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு , “ மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படாது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். இது அவரின் தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சரி. ஆனால் அரசாங்கத்தின் முடிவாக இருந்தால் அது ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும். தேர்தல் தொடர்பில் எவரும் கருத்து கூறலாம். ஆனால் முடிவெடுக்கும் […]

உலகம்

பந்தர் அப்பாஸ் துறைமுகம் மீதான தாக்குதல் எதிரொலி – எண்ணெய் விலை உயர்வு!

  • May 28, 2026
  • 0 Comments

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து உலக சந்தையில் எரிபொருளின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. அதன்படி, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 3 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 3.75 சதவீதம் அதிகரித்து, 97.8 டொலராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகி வந்த வேளையில், இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் சூழல் […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்காவைச் சார்ந்திருந்த கொள்கையில் திருப்பம்: பிரான்சுடன் கைகோர்க்கும் நோர்வே!

  • May 28, 2026
  • 0 Comments

நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் புதிய பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதன் மூலம் தங்களின் ராணுவ உறவை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவை மட்டும் நம்பியிருக்காமல், ஐரோப்பாவின் தன்னாட்சி அதிகாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரான்ஸின் அணுசக்தி பாதுகாப்பு வளையத்தில் இணைய நோர்வே சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிரான்ஸின் அணுஆயுத உத்திகளில் நோர்வே முக்கியப் பங்காற்றும், அதேவேளை அமைதிக்காலத்தில் அந்நாட்டின் நிலப்பரப்பில் அணுஆயுதங்கள் எதுவும் நிலைநிறுத்தப்படாது. ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் சூழலில், போலந்து மற்றும் […]

இலங்கை

நாட்டின் 75 ஆண்டுகால சாபமே ஜே.வி.பிதான் – ராஜித்த சேனாரத்ன கடும் விமர்சனம்!

  • May 28, 2026
  • 0 Comments

மாகாண சபை தேர்தல் முறைமைக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நாடு முழுவதும் தீவைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதே ஜே.வி.பிதான் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆரம்பகால அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஜே.வி.பியினர் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் விடுதலை புலிகள் அமைப்பு தலதா மாளிகைக்கு முதலாவதாக தாக்குதல் நடத்தவில்லை. ஜே.வி.பி தான் […]

உலகம் செய்தி

ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்!

  • May 28, 2026
  • 0 Comments

ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் (Bandar Abbas) உள்ள ராணுவ தளமொன்றை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் நான்கு தற்கொலைப்படை ட்ரோன்களை (One-way attack drones) தங்களது படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்துள்ளது. Bandar Abbas தளத்திலிருந்து ஐந்தாவது ட்ரோன் ஏவப்படவிருந்த இறுதி நிமிடத்தில், அந்தத் தளம் […]

ஆஸ்திரேலியா செய்தி

IS அமைப்புடன் தொடர்புடைய பெண் கைது! 10 ஆண்டுகள் சிறை?

  • May 28, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்ட 34 வயது பெண்பெண்மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத அமைப்பொன்றில் (IS) உறுப்பினராக இருந்ததோடு, தடை செய்யப்பட்ட போர்ப் பகுதிக்குள் அவர் நுழைந்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா திரும்பிய இவர், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ்(AFP) தெரிவித்துள்ளது. அவர் இன்று பிற்பகல் மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள இரு குற்றச்சாட்டுகளுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை […]

செய்தி விளையாட்டு

ராஜஸ்தான், குஜராத் அணிகள் நாளை பலப்பரீட்சை!

  • May 28, 2026
  • 0 Comments

IPL தொடரில் நாளை (29) நடைபெறும் 2 வது தகுதிச்சுற்று (Qualifier 2) ஆட்டத்தில் ராஜஸ்தான் , குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன. நியூ சண்டிகார் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று முன் தினம் […]

இலங்கை

களுத்துறையில் துப்பாக்கிச்சூடு!

  • May 28, 2026
  • 0 Comments

களுத்துறை, பள்ளிவாசல் வீதிக்கு அருகில்  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம்  மேற்கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தற்போது மூன்று பொலிஸ் […]

இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல் : ஏழு இலங்கையர்கள் நாடு கடத்தல்

  • May 28, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள் நேற்றிரவு (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தம்வசம் வைத்திருந்ததுடன், அவை தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளுக்கு ‘லைக்’ (Like) செய்தமை மற்றும் கருத்துகளை (Comments) பதிவிட்டமைக்காக இவர்கள் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அம்பலாங்கொட, மாரபன, […]

செய்தி விளையாட்டு

ராஜஸ்தான் அணி வெற்றி: IPL இல் இருந்து வெளியேறியது Sunrisers Hyderabad!

  • May 28, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற விறுவிறுப்பான Eliminator ஆட்டத்தில், Sunrisers Hyderabad அணியை வீழ்த்தி Rajasthan Royals அணி Qualifier 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், ஹைதராபாத் பந்துவீச்சை விளாசித் தள்ளினார். […]