ராஜஸ்தான் அணி வெற்றி: IPL இல் இருந்து வெளியேறியது Sunrisers Hyderabad!
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற விறுவிறுப்பான Eliminator ஆட்டத்தில், Sunrisers Hyderabad அணியை வீழ்த்தி Rajasthan Royals அணி Qualifier 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், ஹைதராபாத் பந்துவீச்சை விளாசித் தள்ளினார்.
சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து, துரதிர்ஷ்டவசமாக 3 ரன்களில் சதத்தைத் தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 244 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு, ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார்.
அபிஷேக் சர்மாவை வீழ்த்திய அவர், 11 பந்துகளில் 33 ரன்கள் குவித்த இஷான் கிஷானையும் வெளியே அனுப்பினார்.
ஷிவாங் குமார் சில பவுண்டரிகளை அடித்துப் போராடினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் ஹைதராபாத் அணி இலக்கை எட்ட முடியாமல் திணறியது.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்று Qualifier 2 சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இந்த வெற்றியை அடுத்து, நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள Qualifier 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தத் தோல்வியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி IPL 2026 தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது.




