செய்தி விளையாட்டு

ராஜஸ்தான், குஜராத் அணிகள் நாளை பலப்பரீட்சை!

IPL தொடரில் நாளை (29) நடைபெறும் 2 வது தகுதிச்சுற்று (Qualifier 2) ஆட்டத்தில் ராஜஸ்தான் , குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

நியூ சண்டிகார் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், இரு அணிகளுக்கும் இடையேயான இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நேற்று முன் தினம் நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று (Qualifier 1) ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற வெளியேறுதல் சுற்று (Eliminator) ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி, நாளை நடைபெறும் 2-வது தகுதிச்சுற்று (Qualifier 2) ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வியடைந்த குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!