அரசியல் இலங்கை செய்தி

ஜனநாயக விரோதச் செயல்: அரசுமீது ஜீவன் கடும் காட்டம்!

மக்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு ,

“ மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படாது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். இது அவரின் தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சரி. ஆனால் அரசாங்கத்தின் முடிவாக இருந்தால் அது ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும்.

தேர்தல் தொடர்பில் எவரும் கருத்து கூறலாம். ஆனால் முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கே உள்ளது.

அந்தவகையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. இதற்கமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையும்கூட.

ரணில் விக்கிரமசிங்க ஆட்சிகாலத்தில் உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்பில் கேள்வி எழுப்பியவர்கள், இன்று மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஏன் கேள்வி எழுப்புவதில்லை?

ஜனாதிபதிக்கே தமது அரசாங்கம்மீது இன்று நம்பிக்கை உள்ளதா என்பது தெரியாது. எனவே, மக்களின் நிலைப்பாட்டை அறிய மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும்.” – என்றார் ஜீவன் தொண்டமான்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!