இலங்கை

நாட்டின் 75 ஆண்டுகால சாபமே ஜே.வி.பிதான் – ராஜித்த சேனாரத்ன கடும் விமர்சனம்!

மாகாண சபை தேர்தல் முறைமைக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நாடு முழுவதும் தீவைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதே ஜே.வி.பிதான் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆரம்பகால அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஜே.வி.பியினர் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன் விடுதலை புலிகள் அமைப்பு தலதா மாளிகைக்கு முதலாவதாக தாக்குதல் நடத்தவில்லை. ஜே.வி.பி தான் 1989 ஆம் ஆண்டு தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரத்தில் ஜே.வி.பி நாடு முழுவதும் தீவைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு 288 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை முழு நாட்டுக்கும் தீ வைத்த ஜே.வி.பி. இன்று 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று குறிப்பிடுகிறது. வரலாற்றை ஆராய்ந்து யார் நாட்டுக்கு சாபமாக செயற்பட்டது என்பதை இளம் தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள்  கட்சியை தான் மாற்றினோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினர் தமது கொள்கையையே மாற்றியுள்ளார்கள். மாகாணசபைத் தேர்தல் தேர்தல் முறைக்கு எதிராக செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் பிற்போடுகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்