இலங்கை

அதிகரிக்கும் மரணங்கள் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

  • June 14, 2026
  • 0 Comments

டெங்கு உள்ளிட்ட வைரஸ் நோய்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  வைத்தியர் கபில கன்னங்கரா,  “நேற்றைய நிலவரப்படி இதுவரை 41,144 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 51 சதவீதமான வழக்குகள்  மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன. ஒரு நாளைக்கு 750 நோயாளிகள் வரை பதிவாகி வருகின்றனர்.   இது மிகவும் மோசமான நிலை. இறப்பு எண்ணிக்கையும் 24 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளால் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. […]

உலகம்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் கடலில் ஏற்பட்ட மாற்றம் : அச்சுறுத்தலில் உயிரினங்கள்!

  • June 14, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம் காரணமாக கடலடி இரண்டு மீட்டர்வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக பவளப்பாறைகள்  வெளிப்பட்டு கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்ல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, “கடலோர உயர்வு” ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபாட்டோ (Cotabato) அகழியின் நகர்வு கடற்கரைப் பகுதிகளை மேல்நோக்கித் தள்ளியுள்ளது.  இதன் விளைவாக, முதலில் நீரில் மூழ்கியிருந்த கடலின் அடிப்பகுதி வெளிப்பட்டுள்ளது” என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கிடையே […]

#SriLanka #PresidentAKD #NewYear2026 #SriLankaNews #ReformLanka #AnuraKumaraDissanayake இலங்கை

கடனுக்க மேல் கடன் வாங்கிய அரசாங்கம்! இரண்டரை வருடத்தில் இவ்வளவா?

  • June 14, 2026
  • 0 Comments

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 1,854 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளது  தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பணவியல் திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு இந்த தகவலை வெளியிப்படுத்தியுள்ளது. அதன்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கும் இந்த ஆண்டு மே 5ஆம் திகதிககும் இடைப்பட்ட காலத்தில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மொத்தமாக 1,854.77 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட […]

விளையாட்டு

துருக்கியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி!

  • June 14, 2026
  • 0 Comments

2026 FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரில்   குரூப் D பிரிவில் துருக்கு மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றுள்ளது. இந்த  போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்காக நெஸ்டரி இரான்குண்டா (Nestory Irankunda) முதல் கோலை அடித்தார். பின்னர், 75-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது கோலை அடித்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது. இந்த […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து அணியின் விளையாட்டு உபகரணங்கள் கொள்ளை!!

  • June 14, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியிடம் இருந்து 18,000 அமெரிக்க டொலர் (23,120 சிங்கப்பூர் டொலர்) மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகளைத் திருடியது தொடர்பாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேநேரம் முஸ்தபா சாலிக் (Mustafa Salik)  மற்றும் எர்ஃபான் கமல்   (Erfan Kamal) ஆகியோர் திருடப்பட்ட சொத்துக்களைப் பெற்றுக் கொண்டமைக்காக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் மேற்படி திருட்டு சம்பவத்திற்காக மிசௌரி சட்டத்தின் கீழ்,   ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என ஜாக்சன் […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டன், ஜப்பானுக்கிடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • June 14, 2026
  • 0 Comments

பிரிட்டனும், ஜப்பானும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், 18 பில்லியன் பவுண்டுகள் (£18bn) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளன. அடுத்த வாரம் நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பிரிட்டன் பிரதமர் Keir Starmer , ஜப்பானிய பிரதமர் Sanae Takaichi ஞாயிற்றுக்கிழமையன்று டவுனிங் ஸ்ட்ரீட்டில் Downing Street வரவேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது, 9 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கடலோர காற்று ஆலை ஒப்பந்தம் உட்பட, வணிக மற்றும் அரசாங்க ரீதியிலான […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலிய சிறுமிக்கு பாகிஸ்தானில் நடந்த கொடூரம்!

  • June 14, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆஸ்திரேலிய நேரப்படி வியாழக்கிழமை, பாகிஸ்தானின் சக்வால் நகரில், Hania Ahmed என்ற சிறுமி காவல்து றையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மேற்கு ஆஸ்திரேலிய பாகிஸ்தானிய சங்கம் தெரிவித்துள்ளது. “இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதிலும் குறிப்பாக 9 வயது சிறுமியின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது” என்று மேற்கு ஆஸ்திரேலிய பாகிஸ்தானிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆசிம் சௌத்ரி […]

செய்தி விளையாட்டு

பிரேசிலுக்கு தடுப்பு அணை அமைத்த மொராக்கோ!

  • June 14, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நியூ ஜெர்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் மொராக்கோ அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. ஆட்டத்தின் தொடக்கத்தில் இஸ்மாயில் சைபாரி மொராக்கோவிற்காக முதல் கோல் அடிக்க, பின்னர் பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் ஒரு அபாரமான கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். புதிய பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி தலைமையில் களமிறங்கிய பிரேசில் அணி, நெய்மர் இல்லாத குறையை உணர்ந்ததோடு வெற்றிக்காகக் கடுமையாகப் போராடியது. கடந்த கால ஜாம்பவான்கள் […]

செய்தி விளையாட்டு

28 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிக் கனியை ருசித்த Scotland!

  • June 14, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்காட்லாந்து அணி, ஹைட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஜான் மெக்கின் அடித்த கோல் மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பைக்குத் திரும்பிய ஸ்காட்லாந்து தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து குழு ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது. 1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பையில் பெற்ற முதல் வெற்றி இது என்பதால், அந்நாட்டு ரசிகர்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பெருமளவில் திரண்டு […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து: ஹார்முஸ் நீரிணை திறப்பு!

  • June 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (14) கைச்சாத்திடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படும் எனவும் அவர் கூறினார். இது தொடர்பாகத் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் வெ ளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதையோ, தயாரிப்பதையோ அல்லது வேறு எந்த வழியிலும் அணு ஆயுதப் பொருட்களைப் பெறுவதையோ இந்த ஒப்பந்தம் நிரந்தரமாகத் தடுக்கும். […]