கடனுக்க மேல் கடன் வாங்கிய அரசாங்கம்! இரண்டரை வருடத்தில் இவ்வளவா?
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 1,854 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பணவியல் திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு இந்த தகவலை வெளியிப்படுத்தியுள்ளது.
அதன்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கும் இந்த ஆண்டு மே 5ஆம் திகதிககும் இடைப்பட்ட காலத்தில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மொத்தமாக 1,854.77 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட 18 திட்டங்கள் தொடர்பாக இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பலதரப்புக் கடன்கள் மற்றும் இருதரப்புக் கடன்கள் அடங்கும்.
இந்தக் கடன்கள் ஜப்பான், கொரியா, சவூதி அரேபியா, நெதர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை இதுவரை 102.02 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெற்றுள்ளது என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




