ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து அணியின் விளையாட்டு உபகரணங்கள் கொள்ளை!!

உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியிடம் இருந்து 18,000 அமெரிக்க டொலர் (23,120 சிங்கப்பூர் டொலர்) மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கருவிகளைத் திருடியது தொடர்பாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் முஸ்தபா சாலிக் (Mustafa Salik)  மற்றும் எர்ஃபான் கமல்   (Erfan Kamal) ஆகியோர் திருடப்பட்ட சொத்துக்களைப் பெற்றுக் கொண்டமைக்காக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி திருட்டு சம்பவத்திற்காக மிசௌரி சட்டத்தின் கீழ்,   ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என ஜாக்சன் கவுண்டி அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

புளோரிடாவில் உள்ள இங்கிலாந்தின் பயிற்சி முகாமிலிருந்து, கேன்சஸ் சிட்டியில் உள்ள அவர்களின் உலகக் கோப்பை தளத்திற்கு உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டபோது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“போட்டியிடுவதற்காக இங்கு வந்துள்ள சர்வதேச அணிகள் உட்பட, உலகக் கோப்பைக்கு வருபவர்களைக் குறிவைக்கும் எந்தவொரு குற்றச் செயலையும் ஜாக்சன் கவுண்டி பொறுத்துக்கொள்ளாது,” என்று அரசு வழக்கறிஞர் ஜான்சன்  தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி