இலங்கை

கம்பஹாவில் 19 மணிநேர நீர்வெட்டு!

  • June 15, 2026
  • 0 Comments

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளைய தினம் நீர் வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறித்த சபை வெளியிட்டுள்ள அறவிப்பில், அத்தனகல்லவில் உள்ள கரஸ்நாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக   19 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  நாளை (16) காலை 8.00 மணி முதல் புதன்கிழமை (17) அதிகாலை 3.00 மணி வரை நீர் விநியோகம் தடை […]

ஐரோப்பா

பாலஸ்தீன அமைப்பிற்கு எதிரான தடையை உறுதி செய்தது லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றம்!

  • June 15, 2026
  • 0 Comments

பாலஸ்தீன அமைப்பிற்கு எதிராக விதக்கப்பட்ட தடையை  லண்டனின் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. 2025, ஜூலை 5 அன்று அமலுக்கு வந்த இந்தத் தடை, நாட்டின் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டது. இதற்கமைய மேற்படி சட்டமானது பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தாலோ அல்லது அதற்கு ஆதரவளித்தாலோ, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய ஒரு குற்றச் செயலாக மாற்றியுள்ளது. இந்நிலையில் இந்த குழு மீதான தடையை எதிர்த்து பாலஸ்தீன […]

உலகம்

ஹைட்டியில் தொடரும் வன்முறை : துரித நடவடிக்கைக்கு ஐ.நா அழைப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

ஹைட்டியில் இந்த ஆண்டு நடந்த கும்பல் வன்முறையில் குறைந்தது 2,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 100 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 12 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்நாட்டில் பரவலாகக் காணப்படும் தண்டனையின்மையைக் கையாளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2021-ல் அப்போதைய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, ஹைட்டி மோசமடைந்து வரும் கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஆயுதமேந்திய கும்பல்கள் […]

ஐரோப்பா

Ukவில் 13 மாதக் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்!! உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!

  • June 15, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில்  37 வயதான ஜேமி வார்லி (Jamie Varley) என்ற  உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர், 13 மாதக் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில்  குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். 13 மாதக் குழந்தையான பிரஸ்டன் டேவியை (Preston Davey) பாலியல் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன், கொடுமை செய்து பின்னர் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரஸ்டன் 09 மாதக் குழந்தையாக இருந்தபோது  ​​ஏப்ரல் 2023-ல் வார்லி மற்றும் மெக்கவன்-ஃபாசக்கர்லி  (McGowan-Fazakerley) தம்பதியால் தத்தெடுக்கப்பட்டுள்ளார். பிரஸ்டன் அவர்களின் […]

உலகம்

பாகிஸ்தானில் பெண் மருத்துவர் மீது ஆசிட் வீச்சு!! தொடர் போராட்டம் முன்னெடுப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் பெண் மருத்துவர் மீது அமிலத் தாக்குதல் (ஆசிட் வீச்சி) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதார அமைப்பில் சீர்திருத்தங்கள் மற்றும் சுகாதாரச் செயலாளர் பதவி விலகக் கோரி பாகிஸ்தானிய மருத்துவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 29 வயதான மருத்துவர் மஹ்னூர் நசீர், கடந்த 05 ஆம் திகதி லிஃப்ட் ஆபரேட்டரால் அமிலத் தாக்குதலுக்கு உள்ளானார். இதில் அவரது முகம் மற்றும் உடலில் 13 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டன. பின்னர் அவர் சிறப்பு சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். […]

ஐரோப்பா செய்தி

நடத்தை மாறினால் மட்டுமே ஈரான் மீதான தடை நீங்கும்: EU அறிவிப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

ஈரானின் நடவடிக்கைகளில் உண்மையான மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சிந்திக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தடைகளை நீக்குவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “களத்தில் ஒரு உண்மையான மற்றும் சாதகமான மாற்றம் ஏற்படும் போது மட்டுமே, அந்தத் தடைகளை நீக்குவது குறித்து நாம் சிந்திக்க […]

ஐரோப்பா

ஸ்டாமரின் சொத்துக்களுக்கு தீவைப்பு!! குற்றவாளிகள் பொலிஸ் காவலில்!

  • June 15, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமரின் வீடு மற்றும் கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு தீவைத்த ரோமன் லவ்ரினோவிச் (Roman Lavrynovych) மற்றும் ஸ்டானிஸ்லாவ் கார்பியூக் (Stanislav Carpiuc) ஆகிய இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் அதுவரை  பொலிஸ் காவலில் வைக்கப்படுவார்கள் என ஓல்ட் பெய்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவங்கள், ‘எல் மனி’ என்று அறியப்பட்ட, ரஷ்ய மொழி பேசும் நபர் ஒருவரால்  திட்டமிடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேற்படி […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம்: இஸ்ரேல் நிதி அமைச்சர் போர்க்கொடி!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி உடன்பாட்டிற்கு எதிராக இஸ்ரேலின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) மற்றும் யாஷர் (Yashar) கட்சியின் தலைவரான காடி ஐசன்கோட் (Gadi Eisenkot) ஆகியோரே இவ்வாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர். “இது ஒரு தோல்வியடைந்த அரசாங்கத்தின் மோசமான முடிவாகும். பிரதமர் நெதன்யாகு வழங்கி வந்த ‘முழுமையான வெற்றி’ என்ற வெற்று வாக்குறுதிகளுக்கும், தற்போது உருவாகியுள்ள இந்த உடன்பாட்டிற்கும் இடையே ஒரு […]

இலங்கை

உள்ளுராட்சி ஆணையாளராக றாபியை நியமித்த கிழக்கு ஆளுநர்!!

  • June 15, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான ஏ.ரி.எம். றாபியை கிழக்கு மாகாண ஆளுநர் நியமித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று  (15) இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜனவரி 01 முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவருக்கு இப்பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் […]

உலகம் செய்தி

போர் விமானங்கள், கப்பல்களை களமிறக்கும் பிரான்ஸ்!

  • June 15, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான கூட்டு ராணுவ நடவடிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தொடங்கப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron அறிவித்துள்ளார். பிரான்சில் இன்று நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த இந்த தகவலை வெளியிட்டார். ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீண்டும் நிலைநிறுத்த பிரிட்டனும் பிரான்சும் மிக விரைவாகச் செயல்படத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் […]