இலங்கை

கம்பஹாவில் 19 மணிநேர நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளைய தினம் நீர் வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குறித்த சபை வெளியிட்டுள்ள அறவிப்பில், அத்தனகல்லவில் உள்ள கரஸ்நாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக   19 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  நாளை (16) காலை 8.00 மணி முதல் புதன்கிழமை (17) அதிகாலை 3.00 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்படும்.

இந்த நீர் விநியோகத் தடை மினுவாங்கொட, கம்பஹா, மஹாரா, அத்தனகல்ல மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களைப் பாதிக்கும்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்