பாகிஸ்தானில் பெண் மருத்துவர் மீது ஆசிட் வீச்சு!! தொடர் போராட்டம் முன்னெடுப்பு!
பாகிஸ்தானில் பெண் மருத்துவர் மீது அமிலத் தாக்குதல் (ஆசிட் வீச்சி) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார அமைப்பில் சீர்திருத்தங்கள் மற்றும் சுகாதாரச் செயலாளர் பதவி விலகக் கோரி பாகிஸ்தானிய மருத்துவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
29 வயதான மருத்துவர் மஹ்னூர் நசீர், கடந்த 05 ஆம் திகதி லிஃப்ட் ஆபரேட்டரால் அமிலத் தாக்குதலுக்கு உள்ளானார்.
இதில் அவரது முகம் மற்றும் உடலில் 13 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டன. பின்னர் அவர் சிறப்பு சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
மாநில சுகாதார அமைச்சர், மருத்துவர் நசீரை பல மாதங்களாக துன்புறுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்த ஹுமாயூன் ஷா என்பர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இளம் மருத்துவர்கள் சங்கம் மாகாணம் தழுவிய புறநோயாளிகள் பிரிவு சேவைகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதன் விளைவாக, 23 மருத்துவர்கள் மற்றும் நான்கு முதுகலைப் பயிற்சி மருத்துவர்களை சுகாதாரத் துறை இடைநீக்கம் செய்தது.
இந்தத் தாக்குதல், பாகிஸ்தானில் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்த குறிப்பிடத்தக்க கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.




