உலகம்

ஹைட்டியில் தொடரும் வன்முறை : துரித நடவடிக்கைக்கு ஐ.நா அழைப்பு!

ஹைட்டியில் இந்த ஆண்டு நடந்த கும்பல் வன்முறையில் குறைந்தது 2,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 100 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

12 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்நாட்டில் பரவலாகக் காணப்படும் தண்டனையின்மையைக் கையாளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2021-ல் அப்போதைய ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, ஹைட்டி மோசமடைந்து வரும் கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஆயுதமேந்திய கும்பல்கள் போர்ட்-ஆ-பிரின்ஸின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துவதோடு, தொடர்ந்து கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை மற்றும் கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றன எனவும் அவர் கூறிள்ளார்.

“ஹைட்டியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடந்த கும்பல் வன்முறையின் விளைவாக, குறைந்தது 2,300 பேர் உயிரிழந்துள்ளனர், 1,100 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 99 பேர் கடத்தப்பட்டுள்ளனர்,” என்று கூறிய அவர், தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலையைச் சமாளிக்க, நீதித்துறைப் பிரிவுகள் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனவும தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்