இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் மரணம்

  • October 18, 2025
  • 0 Comments

மகாராஷ்டிராவின் நந்தூர்பார் (Nandurbar) மாவட்டத்தில் வேகமாக வந்த லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு யாத்திரைத் தலத்திலிருந்து சுமார் 40 பேருடன் வந்த லாரி அதிக வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லாரி ஓட்டுநர் உட்பட காயமடைந்தவர்கள் நந்தூர்பாரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் கணேஷ் பில், பூஷண் கோசாவி, பவன் மிஸ்தாரி, பாபு தங்கர், சேதன் […]

உலகம் செய்தி

நோபல் பரிசு வென்ற சீன இயற்பியலாளர் சென்-நிங் யாங் (Chen-Ning yang) காலமானார்

  • October 18, 2025
  • 0 Comments

பிரபல சீன இயற்பியலாளரும் (physicist) நோபல் பரிசு பெற்றவருமான 103 வயதுடைய சென் நிங்-யாங் (Chen Ningyang) பெய்ஜிங்கில் (Beijing) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். சென் நிங் யாங், 1922ம் ஆண்டு கிழக்கு சீனாவின் அன்ஹுய் (Anhui) மாகாணத்தில் உள்ள ஹெஃபியில் (Hefei) பிறந்தார். 1940களில், அவர் கல்விப் படிப்பைத் தொடர அமெரிக்காவிற்குச் சென்று பின்னர் பல ஆசிரியர் பதவிகளை வகித்தார். 1954ம் ஆண்டில், அவர் அமெரிக்க இயற்பியலாளர் ராபர்ட் மில்ஸுடன் (Robert Mills) இணைந்து சமன்பாடுகளின் தொகுப்பை […]

இந்தியா செய்தி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெய்ப்பூரில் ரூ1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இனிப்பு வகை

  • October 18, 2025
  • 0 Comments

உலகளவில் தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை தீபாவளி ஆகும். இந்த பண்டிகையின் போது இனிப்பு வகைகள், பலகாரங்களை பரிமாறிக்கொள்வது தமிழர் பண்பாடு. இந்நிலையில், ஜெய்ப்பூரின் வைஷாலி (Vaishali) நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில், உண்ணக்கூடிய 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட ‘ஸ்வர்ன் பாஸ்ம் பாக்’ (Swarn Basm Pak) மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ‘சாண்டி பாஸ்ம் பாக்’ (Chaandi Basm Pak) என்ற இனிப்புப் பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இனிப்பு வகைகள், ரூ.45,000 முதல் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சீக்கியப் பெண்ணை இன ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது

  • October 18, 2025
  • 0 Comments

கடந்த மாதம் பிரித்தானியாவில் சீக்கியப் பெண் ஒருவர் இனரீதியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 9ம் திகதி சாண்ட்வெல்லின் (Sandwell) ஓல்ட்பரி (Oldbury) பகுதியில் 20 வயது பிரிட்டிஷ் சீக்கியப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் அளித்ததை தொடர்ந்து கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. “சாண்ட்வெல்லைச் சேர்ந்த 49 வயது ஆணும் 65 வயது பெண்ணும் இன்று பாலியல் வன்கொடுமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்” என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. […]

செய்தி விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை – பாகிஸ்தான், நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து

  • October 18, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 19வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று நியூசிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 25 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 92 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், இடைவிடாது மழை […]

ஐரோப்பா

அமெரிக்காவையும், ரஷ்யாவையும் இணைக்கும் சுரங்கப்பாதையை நிர்மாணிக்க நடவடிக்கை!

  • October 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவையும் ரஷ்யாவையும் இணைக்கும் ஒரு சுரங்கப்பாதையை நிர்மாணிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது. 06 மாதங்களுக்கு முன்பே இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக ரஷ்யாவின் முதலீட்டு தூதர் கூறியுள்ளார். இந்த  ரயில் சுரங்கப்பாதை பெரிங் ஜலசந்தியின் கீழ் இரு நாடுகளையும் இணைக்கக்கூடும் என்று கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev) தெரிவித்துள்ளார். இது ரஷ்யாவின் (Russia) பரந்த மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட சுகோட்கா பகுதியை அலாஸ்காவிலிருந்து (Alaska) பிரிக்கிறது. இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் […]

செய்தி

தைவானில் இறந்த ஊழியரிடம் மருத்துவ விடுப்பு கேட்ட விமான நிறுவனத்தால் சர்ச்சை!

  • October 18, 2025
  • 0 Comments

இறந்த ஊழியரிடமிருந்து மருத்துவ விடுப்பு விண்ணப்பம் தொடர்பான ஆவணங்களை கோரியமைக்காக தைவான் (Taiwan) விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மிலனில் (Milan)  இருந்து தைவானின் (Taiwan) தாயுவான் (Taoyuan) சென்ற விமானத்தில் 34 வயதுடைய பணிப்பெண் ஒருவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார். இந்நிலையில்   ஈவா ஏர் (Eva Air) விமான நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் செப்டம்பர் மாத இறுதியில் குறித்த பெண் மருத்துவ விடுப்பு கோரியதை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு  மின்னஞ்சல் […]

இலங்கை

இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

  • October 18, 2025
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சகம், ‘இஷாரா செவ்வந்தியை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவவின்’ கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த ‘இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவருடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்ஷி உள்ளிட்ட குழுவினரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் அணைவரும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  இதில் பல திடுக்கிடும் தகவல்களை இஷாரா செவ்வந்தி […]

பொழுதுபோக்கு

கும்கி – 2 டீசர் வெளியானது : வெளியீட்டுத் திகதியும் அறிவிப்பு

  • October 18, 2025
  • 0 Comments

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான கும்கி பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது கும்கி 2 ரெடியாகி விட்டது. பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து ‘கும்கி 2’ படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. ‘கும்கி 2’ படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், கும்கி 2 படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசரை […]

உலகம்

வங்கதேசத்தின் விமான நிலையத்தில் தீவிபத்து!

  • October 18, 2025
  • 0 Comments

பங்களாதேஷின் டாக்காவில் (Dhaka) உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தின் (Hazrat Shahjalal International Airport ) சரக்கு பெட்டிகள் வைக்கும் பகுதியில் இன்று  பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்வரும் பல விமானங்கள் சட்டோகிராமில் (Chattogram) உள்ள ஷா அமானத் சர்வதேச விமான நிலையத்திற்கும் ( Shah Amanat International Airport), சில்ஹெட்டில் (Sylhet) உள்ள உஸ்மானி சர்வதேச […]