இலங்கை

மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை

  • October 18, 2025
  • 0 Comments

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்(NBRO) 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை, மாத்தளை மாவட்டத்தின் பல்லேபொல மற்றும் அம்பன்கோறளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை (நிலை 2) விடுக்கப்பட்டுள்ளது. பதுளை(Badulla) மாவட்டத்தின் ஹல்தும்முல்ல மற்றும் ஊவபரணகம, காலி(Galle) மாவட்டத்தின் நெலுவ, கம்பஹா(Gampaha) மாவட்டத்தின் அத்தனகல்ல, கண்டி(Kandy) மாவட்டத்தின் தெல்தோட்ட மற்றும் தொழுவ, கேகாலை(Kegalle) மாவட்டத்தின் […]

பொழுதுபோக்கு

துருவ் விக்ரம் மிரட்டியுள்ள பைசன் : வசூல் எவ்வளவு தெரியுமா?

  • October 18, 2025
  • 0 Comments

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகியிருக்கும் படம் பைசன் காளமாடன். கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளார். இப்படத்தில் பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பைசன் திரைப்படம் உலகளவில் முதல் நாள் 5 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. […]

ஐரோப்பா

கௌரவங்களையும்,’ Duke of York’பட்டத்தையும் துறந்த இளவரசர் ஆண்ட்ரூ(Prince Andrew)

  • October 18, 2025
  • 0 Comments

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ (Prince Andrew), ‘யோர்க் கோமகன்’ (Duke of York) என்ற பட்டம் உட்பட தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பட்டங்களையும், கௌரவங்களையும் இனி பயன்படுத்தப் போவதில்லை என்று நேற்று (17) அறிவித்தார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) விவகாரத்தில் தன் மீதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், அவரது அண்ணன் மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மன்னர் மற்றும் தனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பின்னரே […]

இலங்கை

கைதிக்கு போதைப்பொருள் வழங்க ஏற்பாடு: ஜெயிலர் கைது!

  • October 18, 2025
  • 0 Comments

கைதியொருவருக்கு போதைப்பொருள் மற்றும் கையடக்க தொலைபேசி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார் எனக் கூறப்படும் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி (ஜெயிலர்) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவர் ஊடாகவே குறித்த கைதிக்கு இவற்றை வழங்குவதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், இதற்கு அவர் ஆதரவு வழங்கியுள்ளார் எனவும் காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டுள்ள 53 வயதான ஜெயிலரிடம், காவல்துறையினர் பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஐரோப்பா

உக்ரைனுக்கு டோமாஹாக்ஸை விற்காமல் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் விரும்புகிறார்; ஜெலன்ஸ்கி

  • October 18, 2025
  • 0 Comments

உக்ரைனுக்குத் தேவைப்படும் டோமாஹாக் ஏவுகணைகளை(Tomahawk missile) வழங்கத் தயாராக இல்லை என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் நேற்று(17) ட்ரம்ப்பைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே ரஷ்யாவுக்குள் நீண்ட தூரம் ஊடுருவித் தாக்கக்கூடிய டோமாஹாக் ஏவுகணைகளை அவர் அமெரிக்காவிடம் கோரியுள்ளார். எனினும், அமெரிக்கா தற்போதைக்கு ஒரு தீவிரத்தை விரும்பவில்லை என்பதால், அந்த விவகாரம் குறித்து தாம் கருத்துக்களை வெளியிட விரும்பவில்லை என்று சந்திப்பின் பின் செய்தியாளர்களிடம் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். […]

இலங்கை

வடக்கு முதல்வர் வேட்பாளராக கபிலனை களமிறக்குகிறது என்.பி.பி?

  • October 18, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி(National People’s Power), 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின்கீழ் களமிறங்கவுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதல்வர் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது பற்றி தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. உத்தேச முதல்வர் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கபிலனின் பெயர் முன்னணியில் இருப்பதாக தெரியவருகின்றது. […]

உலகம்

பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 7 வீரர்கள் பலி, 13 பேர் காயம்

  • October 18, 2025
  • 0 Comments

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில்(Kabul) பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்தது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதையடுத்து இருநாட்டு எல்லையிலும் கடும் […]

இலங்கை

செவ்வந்தி மண்ணுக்குள் புதைத்த கையடக்க தொலைபேசி மீட்பு: மேலும் பல தகவல்கள் அம்பலம்!

  • October 18, 2025
  • 0 Comments

பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய திட்டமிடலுக்கு இஷாரா செவ்வந்தி பயன்படுத்தினார் எனக் கூறப்படும் கையடக்க தொலைபேசி சிக்கியுள்ளது. கம்பஹா பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது. எனவே, அதனை ஆய்வு செய்த பின்னர் மேலும் பல முக்கிய தகவல்கள் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இஷாரா செவ்வந்தி, ஜே.கே. பாய் உள்ளிட்ட தரப்புகளிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் பிரகாரம் தேடுதல் வேட்டைகளும், கைதுகளும் இடம்பெற்றுவருகின்றன. நேற்றைய தினமும் தேடுதல் வேட்டை அரங்கேறியது. இதற்கமைய இஷாரா செவ்வந்தி […]

உலகம்

புதினுடனான அழைப்பை அடுத்து ஜெலென்ஸ்கி – ட்ரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு

  • October 18, 2025
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே, ஜனாதிபதி ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினேன். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு […]

உலகம்

வங்கதேசத்தின் டாக்காவில்(Dhaka) அரசாங்கத்தின் புதிய சாசனத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்

  • October 18, 2025
  • 0 Comments

பங்களாதேஷில் முகமது யூனுஸ்(Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று(17) ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த மக்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினரால் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், போராட்டக்காரர்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிய சாசனம் தங்களது கவலைகளை நிவர்த்தி செய்யவில்லை எனக் கோரி இந்தப் […]