பொழுதுபோக்கு

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்கு குட் பை சொன்னது யார்?

  • October 19, 2025
  • 0 Comments

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த போட்டி ஆரம்பமான நிலையில், யோகா ஆசிரியரான நந்தினி, கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருப்பவர்களுடன் சண்டையிட்டு, தாமாக முன்வந்து வெளியேறினார். மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் இயக்குநர் பிரவீன் காந்தி கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், இந்த வாரம் எலிமினேஷனில் அரோரா, கமுருதீன், அப்சரா உள்ளிட்டோர் இருந்தனர். மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் அப்சரா வெளியேறியுள்ளதாகத் […]

இலங்கை

இலங்கை சபாநாயகருக்கு பொறி வைப்பு: வருகிறது பிரேரணை!

  • October 19, 2025
  • 0 Comments

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நாளை மறுதினம் (21) இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது. ஒக்டோபர் மாதத்துக்குரிய 2ஆவது வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகின்றது. குறித்த வாரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் முக்கிய கூட்டங்களும் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் வரைவு நகல் கட்சி தலைவர்களுக்கு அன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. அவர்களின் இணக்கப்பாட்டுக்கு பிறகு பிரேரணை இறுதிப்படுத்தப்படும். பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக […]

உலகம்

அமெரிக்காவில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ள உச்சநீதிமன்றம்!

  • October 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. இருப்பினும் நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாய்வழி வாதங்களைக் கேட்பது, உத்தரவுகள் மற்றும் கருத்துக்களை வெளியிடுவது, வழக்குத் தாக்கல்களைச் செயலாக்குவது மற்றும் அந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான காவல்துறை மற்றும் கட்டிட ஆதரவை வழங்குவது போன்ற அத்தியாவசியப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கருவூலத்துறை நிதி பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. இது உச்ச நீதிமன்றத்தை மட்டும் பாதிக்கவில்லை. முழு கூட்டாட்சி நீதித்துறையும் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

”தோடுகளை விற்றேன், எனது கனவும் கலைந்தது” : வாக்குமூலம் வழங்கிய செவ்வந்தி!

  • October 19, 2025
  • 0 Comments

நேபாளத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில் தனக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதாகவும், கடைசியில் தனது தோடுகளைக்கூட விற்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். பொலிஸ் விசாரணையின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளாரென சிங்கள வார இதழொன்றில் வெளியாகியுள்ள கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுரையில், “அளுத்கடை நீதிமன்றத்துக்குள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்குரிய ஒப்பந்தத்தை, அப்போது வெளிநாட்டில் பதுங்கி இருந்த பாதாள குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மே என்பவரே செவ்வந்திக்கு வழங்கி இருந்தார். சம்பவத்துக்கு பிறகு […]

பொழுதுபோக்கு

‘கருப்பு’ முதல் சிங்கிள் எப்ப தெரியுமா?

  • October 19, 2025
  • 0 Comments

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆன்மிக பின்னணியில் ஆக்ஷன் கதையாக இப்படம் அமையும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டதாகவும், ஆனால் விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட பணிகளால் படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்தப் […]

பொழுதுபோக்கு

ஜீ தமிழ் “அண்ணா” சீரியலில் அதிரடி மாற்றம்!

  • October 19, 2025
  • 0 Comments

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் அண்ணா. இயக்குநர் துர்கா சரவணன் இயக்கத்தில் அண்ணன் மற்றும் தங்கை பாசத்தை மையப்படுத்தி குடும்பக் கதையோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த கதை தற்போது வரையில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சண்முகத்தின் முதல் தங்கையாக நடித்து வருபவர் தான் சுனிதா. இவர் ரத்னா அறிவழகன் என்ற ரோலில் இந்த சீரியலில் […]

இலங்கை

இலங்கையில் குற்றவாளிகள் பிரபலப்படுத்தப்படுகிறார்களா? விமல் விமர்சனம்!

  • October 19, 2025
  • 0 Comments

வெளிநாட்டில் வைத்து கே.பியை கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்தபோது ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படவில்லை. எனினும், செவ்வந்தி விடயத்தில் அவ்வாறு நடப்பது தவறான அணுகு முறையாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச தெரிவித்தார். ” வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்படும் குற்றவாளி விமானத்தில் இறங்குவது முதல் எல்லா தகவல்களும் மிகவும் சுவாரஷ்யமாக ஊடகங்களில் வெளியாகின்றன. ஊடகக் கண்காட்சி காண்பிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள், இதைவிடவும் பயங்கரமான குற்றவாளிகளை வெளிநாட்டில் கைது செய்து […]

இந்தியா செய்தி

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை வழங்கிய விஜய்!

  • October 19, 2025
  • 0 Comments

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த  41 பேரின் குடும்பங்களை விரைவில் சந்திப்பேன் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அத்துடன் முன்னதாக அறிவித்தப்படி 41 குடும்பங்களுக்கும் இழப்பீட்டு தொகையாக 20 இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம். நாம் அறிவித்தபடி குடும்பநல […]

இலங்கை

இலங்கை மாகாண சபைத் தேர்தலை குறிவைக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

  • October 19, 2025
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் 30 இற்கு மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள்  போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தேசிய மக்கள் சக்தி அலையை சமாளித்து, தமது கட்சிகளுக்குரிய வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளும் நோக்கிலும், மக்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவை நாடிபிடித்து பார்க்கும் வகையிலுமே முன்னாள் அமைச்சர்கள் இவ்வாறு களமிறங்கவுள்ளனர். நவீன் திஸாநாயக்க, உதய கம்மன்பில, ஹிருணிக்கா பிரேமசந்திர, முஷாரப், மருதபாண்டி ராமேஸ்வரன், வடிவேல் சுரேஷ், யோகேஸ்வரன் உட்பட மேலும் பல முன்னாள் […]

உலகம்

போதைப்பொருளுடன் அமெரிக்கா நோக்கி பயணித்த நீர்மூழ்கி கப்பல்!

  • October 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களுடன் பயணித்த நீர்மூழ்கிக் கப்பலை அழிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump)  தனது ட்ரூத் சோசியல் மீடியா  (Truth Social Media) பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கப்பலில் போதைப்பொருள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். கப்பலில் நான்கு அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாகவும், அவர்களில் இருவர் கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நீர்மூழ்கிக் கப்பல் நிலத்தை அடைந்திருந்தால், […]