இலங்கை

இலங்கையில் பாரிய சரிவை சந்தித்த தங்கத்தின் விலை

இலங்கையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகிறது.

அதன்படி, ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 77,000 ரூபாய் குறைந்துள்ளது.

உள்ளூர் சந்தையில் முதன்முறையாக, கடந்த வாரம் 24 தங்கம் பவுன் ஒன்று 410,000 ரூபாயாக உயர்ந்தது.

இருப்பினும், நேற்று, 24 கரட் தங்கம் பவுன் விலை  330,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுன் விலை 302,300 ரூபாயாகவும் பதிவானது.

அதன்படி, நேற்று மட்டும் தங்கத்தின் விலை மேலும் 10,000 ரூபாயாக குறைந்துள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினமும் தங்கத்தின் விலை, எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்