Flydubai விமானிக்கு உயரிய கௌரவம் – நினைவுச்சுடரை ஏற்ற அழைப்பு
இஸ்ரேலின் அடுத்த சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் நினைவுச்சுடரை ஏற்ற ஃப்ளைதுபாய் FZ1073 விமானத்தின் இந்திய விமானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பில், “எங்கள் சுதந்திர தினத்தில் கேப்டன் ஸ்மித்தும் பிரதமர் மோடியும் கொண்டாட்டச் சுடரை ஏந்திச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இது எங்களுக்குக் கிடைக்கும் மிக உயர்ந்த மரியாதை. வழக்கமாக நாங்கள் இதை இஸ்ரேலியக் குடிமக்களுக்காக ஒதுக்கி வைப்போம், ஆனால் இந்த முறை, இஸ்ரேலின் அனைத்துக் குடிமக்களும் உங்களை அரவணைப்பார்கள்,” என்று கூறினார்.
துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தை ஏதாவது ஒரு இலக்கில் மோதி வெடிக்கவைக்க துணை விமானி முயற்சித்திருந்தார்த.
இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக அறிவிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




