இலங்கை செய்தி

அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் , மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் விசேட அமைதி வழி உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் , மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் விசேட அமைதி வழி உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்போராட்டம் இடம்பெறும்.

மரண தண்டனை விளிம்பில் இருக்கும் சிவராசா அனோஜனை சவூதி அரசு மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இப்போராட்டம் நடத்தப்படுகின்றது.

மேலும் இலங்கை அரசாங்கம், தமிழ், இஸ்லாமிய மற்றும் பௌத்த அமைப்புகள் அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்கும் நோக்கிலேயே இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் செயலாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம், கொழும்பில் வாழும் தமிழ், இஸ்லாமிய மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த அனைத்து மூவின மக்களும் நேரில் வருகை தந்து இந்த அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாடு முழுவதிலும் உள்ள சுமார் 1,000 இந்து அமைப்புக்கள் மற்றும் திருக்கோயில்களின் பிரதிநிதிகளிடம் கையெழுத்துக்களைப் பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பெறப்படும் கையெழுத்துக்களை உள்ளடக்கிய மகஜர் தயார் செய்யப்பட்டு இலங்கை அரசு, சவூதி அரேபிய அரசு, இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற சர்வதேச அமைப்புகளுக்கும் முறைப்படி கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, கட்சி மற்றும் மத வேறுபாடுகளின்றி அனைத்து மக்களும் திரண்டு வந்து ஆதரவு வழங்குமாறு அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை