உலகம் செய்தி

அமெரிக்கா, ஈரான் ஒப்பந்தத்துக்குள் ‘லெபனான்’!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்படும் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திலும் லெபனான் ஒரு அங்கமாக இருக்கும் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் Hassan Fadlallah தெரிவித்துள்ளார்.

லெபனான் அரசாங்கம், இஸ்ரேலுடன் தற்போது மேற்கொள்ளும் நேரடிப் பேச்சுவார்த்தைகள் தெற்குப் பகுதியில் எவ்விதத் தீர்வையும் வழங்கவில்லை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

லெபனான் அரசு நாட்டின் நலன்களை விட்டுக்கொடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள Hassan Fadlallah, பலம் வாய்ந்த நிலையில் இருந்து நடத்தப்படும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளையே ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொள்ள போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும். இராணுவ பலத்துடன் அவ்வமைப்புக்கு அந்நாட்டில் அரசியல் பலமும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி