உலகம்

கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பச்சைக்கொடி

ஆர்டிக் தீவின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், டென்மார்க் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று  ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு 109   உறுப்பினர்கள் ஆதரவளித்ததாகவும், யாரும் எதிராக வாக்களிக்கவில்லை என்றும் நாடாளுமன்றக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பில் அமெரிக்காவிற்குத் தெரிவித்தவுடன் இந்த நிர்வாக ஒப்பந்தம் உத்தியோகப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஒப்பந்தம், கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவத்தின் பங்கை விரிவுபடுத்துகிறது.

குறிப்பாக  “கோல்டன் டோம்” ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான அனுமதியை அமெரிக்காவிற்கு வழங்குகிறது.

அதே நேரத்தில், டென்மார்க்கின் இறையாண்மையையும் கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கனிம வளம் நிறைந்ததும், 57,000 மக்கள் வசிக்கும் டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமுமான கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அத் தீவை பாதுகாப்பதற்காக டென்மார்க் அரசாங்கம் அமெரிக்கா, மற்றும் கீரின்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து கடந்த செப்டம்பர் மாதம் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்