பிரான்ஸில் கறுப்பினத்தவரை கொலை செய்த வழக்கு – பொலிஸ் அதிகாரியின் தண்டனைக் காலம் குறைப்பு
பிரான்ஸில் கடந்த 2020 ஆம் ஆண்டு கறுப்பின சாரதி ஒருவரை கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீட்டிற்கு பின் 08 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இரவு நேர போக்குவரத்து சோதனையின்போது ஒலிவியோ கோம்ஸ் என நபரை 35 வயதான கில்லெஸ் கில்பர்ட் என்ற பொலிஸ் அதிகாரி அருகில் இருந்து சுட்டுக் கொன்றார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் தற்பாதுகாப்பிற்காக துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இருப்பினும் நீதிமன்றம் அவரின் வாதத்தை நிராகரித்து 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அத்துடன் அவர் மீண்டும் காவலராகப் பணியாற்றத் தடை விதித்ததுடன், 15 ஆண்டுகளுக்குத் துப்பாக்கி எடுத்துச் செல்லவும் தடை விதித்தது.
இந்நிலையில் கீழ் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் மேன்முறையீட்டில் அவருடைய தண்டனை காலம் 08 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.




