ஐ.நா பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி – வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளால் சிக்கல்
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் பதவிக் காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில் அப்பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
அடுத்த ஐ.நா. தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் இந்த வாரம் மற்றொரு இரகசிய வாக்கெடுப்பை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை எட்டுச் சுற்று வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தலைவர் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளுக்கு இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
கடந்த 2016 ஆம் ஆண்டு அன்டோனியோ குட்டெரெஸ் ஐ.நா மன்றத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஆறு சுற்று இரகசிய வாக்கெடுப்பில் அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும் தற்போது 08 வாக்கெடுப்புகள் நிறைவடைந்துள்ளபோதிலும் தலைவர் ஒருவரை கண்டுப்பிடிக்க முடியாமல் இருப்பதற்கு வெளிப்படை தன்மையற்ற வாக்கெடுப்புகளே காரணம் என நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் வரும் டிசம்பர் 31 ஆம் திகதி குட்ரெஸ் பதவி விலகும்போது அப்பதவி வெற்றிடமாகும் நிலை அல்லது ஐ.நா மன்றம் தலைவர் இன்றி காணப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.




