ரஷ்யாவின் கடலடி அச்சுறுத்தல்கள் – 90 மில்லியன் பவுண்ட்ஸ் நிதி ஒதுக்கீடு
வட அட்லாண்டிக்கில் ரஷ்யாவின் கடலடி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும் ஏதுவாக 90 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியை ஒதுக்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
ராயல் கடற்படைக்கு உதவும் வகையில், ட்ரோன்கள், சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலடி உள்கட்டமைப்புகளைச் சுற்றி ரஷ்யா தனது செயல்பாடுகளை அதிகரித்துள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கடல் பகுதிகளிலும் அதைச் சுற்றியும் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தங்கியிருந்ததாகக் கூறப்பட்ட ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களை அகற்றுவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் இராணுவ கப்பல்கள் அனுப்பட்டதாக பிரித்தானி கடற்படை தெரிவித்துள்ளது,
மேலும், கேபிள்கள் அல்லது குழாய்களைச் சேதப்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இந்த நிதி தொகுப்பை பிரித்தானியா அறவித்துள்ளது.




