இலங்கை செய்தி

கிழக்கு யுவதி மலையகத்தில் சடலமாக மீட்பு: காதலன் தப்பியோட்டம்: நடந்தது என்ன?

இலங்கையில் கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த யுவதியொருவர், மலையகம் நுவரெலியா மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த யுவதியொருவர், மலையகம் நுவரெலியா மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய பியூமி தில்ஷானி என்ற இளம் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண், நுவரெலியா தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த 07ஆம் திகதி குறித்த சுற்றுலா விடுதிக்கு வருகை தந்து, கட்டணம் செலுத்தி அறையை முன்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று(10) காலை குறித்த பெண் விடுதிக்குள் காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட விடுதியின் உரிமையாளர், இது தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவானின் இடப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை