பொழுதுபோக்கு

செய்தி தெரியுமா? கங்குவா கிளைமேக்ஸ் காட்சியில் வரப்போகும் உடன்பிறப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நாளை சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மேலும் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸை வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் படத்தில் இருக்கும் முக்கியமான சீக்ரெட் ஒன்று தற்போது கசிந்துள்ளது. அதாவது கங்குவா இரண்டு பாகங்களாக எடுக்கப்பட உள்ளதை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் உறுதிப்படுத்தி இருந்தார்.

அதை அடுத்து முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி வர இருக்கிறாராம். உடன்பிறப்புகளான சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது.

அதை நிறைவேற்றும் பொருட்டு கங்குவாவில் கார்த்தி இணைந்துள்ளார். முதல் பாகத்தின் இறுதியில் அவர் வரும் காட்சிகள் இரண்டாம் பாகத்திற்கான லீடாக இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இரண்டாம் பாகத்தில் சூர்யா, கார்த்தியின் வெறித்தனமான காம்போவை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அது மட்டும் இன்றி இந்த கிளைமாக்ஸ் காட்சி நிச்சயம் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் வந்தது போல் பயங்கரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் கார்த்தியின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்