ஐரோப்பா

பிறப்பு விகித சரிவை சமாளிக்க பிரான்ஸ் வகுத்துள்ள புதிய திட்டம் – பெற்றோருக்கு விசேட விடுமுறை

பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் பிரான்ஸில் பெற்றோர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனால் நேற்று முன்தினம் பூர்வாங்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் மகப் பேறின்மை என்பவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்தை ஜனாதிபதி மக்ரோன் 2024 இல் வெளியிட்டார்.

இதற்கமைய தாய்மாரும் தந்தையரும் தங்களுக்கு ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ள உரிமைகளுக்கு மேலாக ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் மேலதிகமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலத்தின்போது  முதல் மாதத்தில் தங்கள் நிகர சம்பளத்தில் 70 சதவீதத்தையும், இரண்டாவது மாதத்தில் 60 சதவீதத்தையும் பெற்றோர் பெற்றுக்கொள்ளவும்  வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முன்னதாக தாய்க்கு நான்கு மாதங்களுக்கும் குறைவாகவும், தந்தைக்கு பிரசவத்திற்க பின்  28 நாட்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்