காங்கோவில் கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா – மருத்துவ வசதிகள் இன்றி திணறல்
காங்கோவில் எபோலா நோய் தொற்று 06 மாதங்களைக் கடந்தும் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நோயாளிகள் கண்டறிப்படாமல் இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் நோய்ப் பரவல் அதிகமாக உள்ளது என்றும், மேலும் இந்த வைரஸ் இன்னும் கட்டுப்பாடின்றி பரவி வருகிறது என்றும் மெடிசின் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (MSF) என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
தற்போது உறுதிசெய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 11,000 கடந்துள்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் மருத்துவ சேவைகள் உரியவர்களை அல்லது தேவையானவர்களை சென்றடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சி பெறாத மற்றும் ஊதியம் பெறாத பணியாளர்கள், எரிபொருள் இல்லாத ஆம்புலன்ஸ்கள், மற்றும் சந்தேகிக்கப்படும் நோயாளிகளைப் பாதுகாப்பாகக் கையாள்வதற்கான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பொருட்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவ் அமைப்பு எடுத்துக்கூறியுள்ளது.




