பொழுதுபோக்கு

கண் பார்வை குறைபாடு உள்ளவர்களும் தெளிவாக டிவி பார்க்கலாம் – சாம்சங் அறிமுகம் செய்த புதிய அம்சம்!

சாம்சங் நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஸ்மார்ட்போன், தொலைகாட்சி சந்தைகளில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் சமீபத்தில் தான் கேலக்ஸி F54 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

இந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தனது 2023 டிவி மற்றும் மானிட்டர் மாடல்களில் புதிய அம்சத்தை வழங்குகிறது. புதிய அம்சம் சீகலர்ஸ் மோட் (SeeColorsMode) என்று அழைக்கப்படுகிறது.

புதிய அம்சம் நிறங்களை கண்டறியும் குறைபாடு கொண்டவர்களுக்கும் சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளது.

சீகலர்ஸ் மோட் பயனர்களுக்கு ஒன்பது வித்தியாசமான பிக்சர் பிரீசெட்களை வழங்குகிறது. இந்த அம்சம் ரெட், கிரீன் மற்றும் புளூ நிற அளவுகளை மாற்றியமைத்து, திரையில் பயனர்கள் நிறங்கள் இடையே வித்தியாசப்படுத்திக் கொள்ள உதவுகிறது.

2017 ஆண்டு ஆப் வடிவில் வழங்கப்பட்ட சீகலர்ஸ் அம்சம் தற்போது டிவி மற்றும் மமானிட்டர்களின் அக்சபிலிட்டி மெனுக்களில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

2023 மாடல்களை ஏற்கனவே வாங்கி பயன்படுத்தி வருபவர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்குவதற்கான மென்பொருள் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர சாம்சங் நிறுவனம் கலர் விஷன் அக்சஸபிலிட்டி சான்றினை டியுவி ரெயின்லேன்ட்-இடம் பெற்றுள்ளது. எங்கும் ஸ்கிரீன், அனைவருக்கும் ஸ்கிரீன்கள் என்ற சாம்சங் நிறுவன இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய அக்சஸிபிலிட்டி அம்சம் வழங்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content