Consent Preferences
இலங்கை செய்தி

லலித், குகன் வழக்கு: கோட்டாபயவிடம் மீண்டும் சாட்சியம் பெற திகதி நிர்ணயம்

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதியை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

இன்று (27) பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக அவர் வழங்கிய சாட்சியங்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் பதிவு செய்தது.

இந்த நிலையில், வழக்கு தொடர்பான மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக பெப்ரவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை