Consent Preferences
இலங்கை செய்தி

இலங்கையில் பொலிஸ் நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசி எடுத்து செல்ல தடையா?

பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் வகையில் அரசாங்கம் எந்தவொரு சுற்றறிக்கையையும் வெளியிடவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் வகையில் அரசாங்கம் எந்தவொரு சுற்றறிக்கையையும் வெளியிடவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

பொலிஸ் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும்போது தங்களது கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்ல முடியும்.

எனினும், பொலிஸ் அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை