இந்தியா செய்தி

நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உட்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது, கடன் பணத்தில் முறைகேடாக வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கியமை உள்ளிட்ட நிதி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதுதொடர்பில் அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றிலும் வழக்கு நிலுவையில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அனில் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான 12,000 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.

நியூயோர்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியதில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக அனில் அம்பானி மற்றும் அவரது மனைவியும் முன்னாள் நடிகையுமான டினா அம்பானி ஆகியோ ரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை தீர்மானித்தது.

இதன்பின்னர் இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடந்த 10 மற்றும் 17 ஆம் திதகி ஆகிய 2 முறையும் டினா அம்பானி ஆஜராகவில்லை. இதே போல அனில் அம்பானியும் இந்த வாரம் வாக்குமூலம் அளிக்கத் தவறினார்.

இந்த நிலையில் அனில் அம்பானிக்கு அமலாக்கத் துறை புதிய சம்மனை அனுப்பியது. நிதி மோசடி தொடர்பான வழக்கில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் அனில் அம்பானி ஒரு முறை அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.

இதேவேளை டினா அம்பானி ஆஜராக புதிய திகதி அளிக்கப்பட்டள்ளதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லையென இந்திய செய்திகள்
தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவர் புனித் கர்க் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி