இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

அதிரடியாக கைது செய்யப்பட்ட மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ

பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரர், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், பொது அலுவலகத்தில் முறைகேடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று வியாழக்கிழமை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நோர்போக் மாநிலம் சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் உள்ள ஆண்ட்ரூவின் வீட்டில்
தேம்ஸ் பொலிஸார் அவரை கைது செய்தனர்.

அடையாளம் தெரியாத பொலிஸ் வாகனங்கள் மற்றும் சாதாரண உடையில் வருகை தந்த
அதிகாரிகள் அவரது வீட்டின் அருகே இருப்பதையும் புகைப்படங்களில் காண முடிகிறது.

முன்னர் பிரித்தானிய வர்த்தக தூதராக பணியாற்றிய ஆண்ட்ரூ, முக்கிய அரசாங்கத் தகவல்களை வெளிப்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார். இதற்காக தொடர்ச்சியான விசாரணை இடம்பெற்று வருகிறது.

குறிப்பாக மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான அவரது உறவுகள், நீண்ட காலமாக விமர்சனத்திற்கு காரணமாக உள்ளன.

அண்மையில் வெளியான “எப்ஸ்டீன் கோப்புகளில் , ஆண்ட்ரூ உத்தியோகப்பூர்வ
கடமைகளின் போது முறையற்ற வகையில் செயற்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரின் பரந்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி