ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இருப்பினும், சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் அண்மை காலமாக பல பகுதிகளில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன.
குறிப்பாக அதிக செயல்பாடுள்ள நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள இந்து குஷ் பகுதியில், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது,




