உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

  • July 2, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும், சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் அண்மை காலமாக பல பகுதிகளில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக அதிக செயல்பாடுள்ள நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள இந்து குஷ் பகுதியில், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது,

உலகம்

ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : இந்தியாவிலும் உணரப்பட்டது

  • June 27, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் தீவிர தன்மை காரணமாக வட இந்தியாவின் பல பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இரவு 7.04 மணிக்கு ஏற்பட்டது என்றும், இது பூமிக்கு அடியில் 215 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இதற்கிடையே நேற்றில் இருந்து பாகிஸ்தானின் தென்மேற்கு […]

உலகம்

மீண்டும் மோதிக் கொள்ளும் ஆப்கான் – பாகிஸ்தான் : 11 பேர் மரணம்!

  • June 10, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 11 குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் தரப்பிலிருந்து உடனடியாக எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹசன் கெல் பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் பாதுகாப்பு சோதனை சாவடியை தாக்கியதை தொடர்ந்து மேற்படி வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

உலகம்

ஆப்கானிஸ்தானில் கோர விபத்து – 18 பேர் உயிரிழப்பு!

  • May 30, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் கவிழ்ந்து இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 10 குழந்தைகள் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக நங்கர்ஹாரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் (Zabihullah Mujahid)   ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது […]

உலகம்

எல்லையில் மோதிக்கொள்ளும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – தோஹாவில் (Doha) ஒன்றுக்கூடிய தலைவர்கள்!

  • October 18, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் (Afghan)மற்றும் பாகிஸ்தானுக்கு (Pakistan) இடையில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் மோதலை தவிர்க்க இரு நாட்டு பிரதிநிதிகளும் உடன்பட்டுள்ளனர். இதற்கமைய மோதலை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை கட்டாரின் தலைநகரமான தோஹாவில் (Qatari capital Doha) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் (Afghan) பிரதிநிதிகள் குழுவில் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஆகியோர் அடங்குவர் என்று தலிபான் (Taliban) அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல் பாகிஸ்தானை (Pakistan) பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்று சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யார் யார் சென்றார்கள் என்ற […]

உலகம்

48 மணிநேர தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்!

  • October 15, 2025
  • 0 Comments

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. அதன்படி, இன்று (15) பாகிஸ்தான் நேரப்படி மாலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு இந்த போர் நிறுத்தத்தை அமல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் இந்த போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக தலிபான் நிர்வாகம் கூறுகிறது. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நடந்து வரும் மோதல்களில் இதுவரை இரு தரப்பினரும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 200 […]