Consent Preferences
ஐரோப்பா

ட்ரோன் அச்சுறுத்தல் – இரவில் விமானங்களை இடமாற்றும் பிரித்தானியா

  • November 25, 2026
  • 0 Comments

இரவு நேரங்களில் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து விமானங்களை பாதுகாப்பதற்காக அவற்றை கொட்டகைக்கு மாற்றும் செயற்பாடுகளை பிரித்தானியாவின் ரோயல் ஏர் ஃபோர்ஸ் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஊடகங்கள் இன்று இந்த செய்தியை பிரசூரித்துள்ளன. இருப்பினும் அந்த செய்திகளில் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை. செய்தியின்படி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள விமானங்களைப் பாதுகாக்க ட்ரோன் எதிர்ப்பு வலைகளைப் பயன்படுத்தும் திட்டங்களையும் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் நாசவேலை அச்சுறுத்தல் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் RAF Lakenheath தளத்தில் ட்ரோன் அச்சுறுத்தல்

  • November 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள ஆர்.ஏ.எஃப் லேக்கன்ஹீத் (RAF Lakenheath) தளத்தில், அனுமதியற்ற ட்ரோன் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க  விமானப்படையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பணியாளர்களுக்கோ, விமானங்களுக்கோ அல்லது உள்கட்டமைப்புகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பிய மின்னஞ்சலில், “எங்கள் அமெரிக்கப் படைவீரர்கள், அமெரிக்க மற்றும் அந்த நாட்டு குடிமக்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் எங்கள் குடும்பத்தினர் என அனைவரின் பாதுகாப்பை உறுதிசெய்ய, […]

ஐரோப்பா

ட்ரோன் அச்சுறுத்தல் – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

  • October 26, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து நியூயார்க் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் போயிங் 777 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானம் 6,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​அதன் வலது இறக்கைக்கு மேலே சுமார் 50 அடி உயரத்தில் ட்ரோன் ஒன்றை எதிர்கொண்டதை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொருள் பளபளப்பாகவும், உலோகத் தன்மையுடனும், பிரதிபலிக்கும் தன்மையுடனும் காணப்பட்டதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தற்காப்பு நடவடிக்கை எதுவும் […]

ஐரோப்பா

ட்ரோன் அச்சுறுத்தல் : ஜெர்மனியின் விமான நிலையம் மூடப்பட்டது!

  • May 30, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் மியூனிக் விமான நிலையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் ட்ரோன் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து விமான நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை செய்தித் தொடர்பாளர், இரு விமானிகள் ட்ரோனை இனங்கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்திற்கு வருகை தந்தது. அங்கு கள ஆய்வுகளை மேற்கொண்டதை தொடர்ந்து  ஜெர்மன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் ஒருங்கிணைந்து ஓடுபாதையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.