இஸ்ரேலிய ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் பறவை மோதியதால் பரபரப்பு
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் பயணித்த ஹெலிகாப்டர் பறவை மோதியதால், அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இஸ்ரேலிய ஊடகங்களின்படி, ஜனாதிபதி ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமில் இருந்து வடக்கு இஸ்ரேலுக்குப் பயணம் செய்துகொண்டிருந்தார். இதன்போது, திடீரென ஒரு பறவை அவரது ஹெலிகாப்டர் மீது மோதியது. பறவை மோதியதன் காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் இஸ்ரேலிய ஜனாதிபதி மற்றொரு ஹெலிகாப்டரில் தனது பயணத்தைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




