பொழுதுபோக்கு

ஜவான் பார்ட் 2 – அட்லீ வெளியிட்ட சூப்பர் தகவல்

நடிகர் ஷாருக்கான், நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகி வசூல்வேட்டை நடத்தி வருகிறது ஜவான் படம்.

இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை சிறப்பாக்கியுள்ளார் இயக்குநர் அட்லி. இந்தப் படத்தின்மூலம் நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இரண்டாவது வாரத்தில் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவரும் ஜவான் படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது.

இந்தப் படம் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளதால் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தன்னுடைய படங்களில் எப்போதுமே Open End க்ளைமாக்சையே தான் வைத்துள்ளதாகவும் ஆனால் எந்தப் படத்திற்கும் இரண்டாவது பாகம் குறித்து யோசித்து தான் இதை செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் சூழ்நிலைகள் சிறப்பாக அமைந்தால் ஜவான் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பேன் என்றும் அட்லீ தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திலும் Open endஐயே வைத்துள்ளதால் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்புடன் விரைவில் ரசிகர்களை சந்திப்பேன் என்றும் முன்னதாக கிரிக்கெட் விக்ரம் ரத்தோர் பயோ பிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content