மத்திய கிழக்கு

துருக்கி- அதிபரின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் ராஜினாமா

துருக்கியில் 2014ம் ஆண்டு முதல் அதிபர் தாயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றார்.

இதனையடுத்து அங்கு புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு மந்திரி பதவி வகிக்காத 90 சதவீதம் பேருக்கு இந்த முறை புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனால் முந்தைய அமைச்சரவையில் இருந்த பலரும் தற்போது அதிபரின் சிறப்பு ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். எனினும் அமைச்சரவையில் பதவி வழங்காததால் அவர்கள்அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் அங்கு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது துருக்கி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content