செல்லப்பிராணிகளின் உரோமங்களில் இருந்து வைரம் – உலகையே வாய்பிளக்க வைத்த சீனா
சீனாவில் செல்லபிராணிகளின் உரோமங்களை பயன்படுத்தி வைரம் செய்யும் தொழில் பிரபலமாக வளர்ந்து வருகிறது. இதற்காக செல்வந்தர்கள் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நாயின் உரோமத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட வைர மோதிரத்திற்காக 8,950 யுவான் (US$1,350) பணத்தை செலவழித்துள்ளார். தற்போது இந்த தொழில் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலான விவாதம் எழுந்துள்ளது. அதாவது இறக்கும் தருவாயில் இருக்கும் செல்லப்பிராணிகளின் உரோமங்கள் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு பிரின்சஸ்-கட் வைரங்களாக உருமாற்றப்படுகின்றன. அதனைக்கொண்டு மோதிரம் […]



