பொழுதுபோக்கு

தோணி- ராம்சரண் திடீர் சந்திப்பு ; எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

கிரிக்கெட் வீரர் தோனியை நடிகர் ராம்சரண் இன்று சந்தித்து பேசியுள்ள படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் ராம்சரண் ‘RRR’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தற்போது ‘கேம்சேஞ்சர்’ படத்தில் பிஸியாக உள்ளார். கியாரா அத்வானி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தில் ராஜூ தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் ராம் சரண் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சுவாமி தரிசனம் முடித்து விட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை நடிகர் ராம்சரண் சந்தித்துப் பேசினார். இந்தப் புகைப்படங்களை தோனி மற்றும் ராம்சரண் ரசிகர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

மும்பை கோயிலில் நடிகர் ராம்சரண்

தோனி எண்டர்டென்மெண்ட்’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தோனி நடத்தி வருகிறார். ஏற்கெனவே, ‘தி ரோர் ஆஃப் தி லயன்’ என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம் ‘எல்ஜிஎம்’ என்ற தமிழ் படத்தையும் தயாரித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் ராம்சரண், தோனி சந்திப்பு சினிமா சம்பந்தப்பட்டதா என்ற அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content