அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றுவதை நேரலையில் ஒளிபரப்ப தீர்மானம்
அமெரிக்காவில் குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரலையில் ஒளிபரப்ப ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிசம்பர் 03 ஆம் திகதி நிதால் மாலிக் ஹசன் Nidal Malik Hasan என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், இதுபோன்ற செயல்களின் கடுமையான விளைவுகளை எடுத்துக்காட்ட, மரணதண்டனையை ஒளிபரப்பும் முடிவு ஒரு மிக எளிதான முடிவு என விவரித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டு ஃபோர்ட் ஹூட் ராணுவத் தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்திற்காக ஹசன் 2013-ல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
1961 ஆம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




