உலகம்

இஸ்ரேலில் நெதன்யாகு தலைமையில் புதிய நாடாளுமன்றம் அமைக்க தீர்மானம்

இஸ்ரேலில் இன்று  பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படவுள்ளது.

ஆனால் நாடளுமன்றத்தில் நெதன்யாகுவிற்கு சாதகமற்ற நிலை  காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே வரும் காலங்கள் அவருக்கு சவாலாகவே இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலிய தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி  முன்னாள் இராணுவத் தளபதியான காடி ஐசன்கோட்டிற்கு, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை வழங்கினார்.

இருப்பினும்  அவரிடமோ அல்லது நெதன்யாகுவிடமோ பெரும்பான்மை இல்லாததால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே நீண்டகாலமாக பிரதமர் பதவி வகித்த நெதன்யாகுவே அந்த பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார்.

இதற்கிடையே புதிய நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவின் அணி, முன்பு கொண்டிருந்த தீர்க்கமான 68 இடங்களிலிருந்து 53 இடங்களாகச் சரிந்துள்ளது.

இது நெதன்யாகுவிற்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகும். இதனால் அவருடைய தீர்மானங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் நிலை எழும்.

அத்துடன் ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்குவதற்கு நெதன்யாகுவுக்கு ஆணை இல்லை என்று ஐசன்கோட் இராணுவத் தளபதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்