வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் -நாளை முதல் தொடரும் மழை
இலங்கையின் பல பகுதிகளில் நாளை (21) முதல் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடாவில், அந்தமான் பிராந்தியத்திற்கு அருகில் குறைந்த காற்றழுத்தப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது.
இந்த வளிமண்டலத் தொகுதியால் தீவுக்கு நேரடி பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், இத்தொகுதியை நோக்கிய காற்றின் போக்கு காரணமாக, பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இப்பகுதிகளில் உள்ள சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




