அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மலையகத்தில் போராட்டம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு இலங்கை இளைஞருக்கு கருணை காட்டக் கோரி, மலையகத்தில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டனில் உள்ள மல்லியப்பூ சந்திக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் முகமது நபி அவர்களை இழிவுப்படுத்தியதாகக் கூறி நற்பட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக 05வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் அந்த தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் உத்தியோகப்பூரர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.




