ஐரோப்பா

ரஷ்யாவின் தலைநகரை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் – இருவர் பலி

ரஷ்யாவின் மொஸ்கோ பகுதியில் உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து, 249 ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், இந்தத் தாக்குதலால் ரஷ்யத் தலைநகரான மொஸ்கோவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்