இலங்கை

கொழும்பு – போதைக்காக மனைவியுடன் வாக்குவாதம்… 7 வயது மகனை தரையில் அடித்த கொடூர தந்தை

போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, தனது ஏழு வயது மகனை தனது கணவர் தரையில் அடித்ததாக பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சம்பவத்தன்று தனது கணவர் பணம் கேட்டு தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், அருகில் வந்த தனது 7 வயது மகனை தூக்கி தரையில் கொடூரமாக தாக்கியதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்ததுடன், தரையில் விழுந்து படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content